நாடாளுமன்றத்தில் அதிரடி காட்டிய கோட்டாபய தரப்பு! அதிர்ச்சியில் சஜித் அணியினர்
பிரதி சபாநாயகர் தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பு நாடாளுமன்றில் இடம்பெற்றது.
இதன் போது எடுக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் ரஞ்சித் சியம்பலபிட்டிய பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அரசு ஆதரவு வாக்குகளால் பிரதிசபாநாயகர் பதவியை ரஞ்சித் சியம்பலபிட்டிய கைப்பற்றியுள்ள நிலையில் , எதிரணியான சஜித் தரப்புக்கு இது பெரும் பின்னடைவை ஏற்பட்டுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேசமயம் பிரதி சபாநாயகர் தெரிவுக்காக நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில், ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலதிக வாக்குகளைப் பெற்று மீண்டும் அப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். பெற்ற வாக்குகள்,
ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய-148
இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் -65
நிராகரிக்கப்பட்டவை- 03
வாக்களித்தாத உறுப்பினர்கள்- 8