பரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு
டோக்கியோ பராஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றெடுத்த விளையாட்டு வீரர்களுக்கு நிதியனுசரணை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
2020 பராஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் குழுவின் ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனையைப் பதிவு செய்து தினேஷ் பிரியந்த ஹேரத் தங்கப்பதக்கத்தை வென்றார். அதேபோல , சமித்த துலான் வெண்கலப் பதக்கத்தை வென்று அதன் மூலம் தாய்நாட்டுக்கு இருவரும் விசேட வெற்றியை ஈட்டித்தந்துள்ளனர்.
1973 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் நிறுவப்பட்டுள்ள தேசிய விளையாட்டுக்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பணப் பரிசுகளை வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மேற்படி வெற்றிகளை ஈட்டித்தந்த விளையாட்டு வீரர்கள் இருவருக்கும் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் இருவருக்கும் தேசிய விளையாட்டுக்கள் சபையின் பரிந்துரைக்கமைய பணப்பரிசு வழங்குவதற்காக விளையாட்டுக்கள் மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதேவேளை இரு வீரர்களும் இன்று மாலை நாட்டை வந்தந்த நிலையில் அவர்களுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
டோக்கியோ பரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தினேஷ் பிரியன்தவுக்கு 5 கோடி ரூபா பணப்பரிசும், வெண்கலப் பதக்கம் வென்ற துலான் கொடிதுவக்குவுக்கு 2 கோடி ரூபா பணப்பரிசும் பயிற்றுநரான பிரதீப் நிஷாந்தவுக்கு ஒரு கோடியே 75 இலட்சம் ரூபா பணப்பரிசும் விளையாட்டுத்துறை அமைச்சினால் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.