இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்ட அறிவிப்பு!
இலங்கைக்கு இந்தியா தனது படைகளை அனுப்புவதாக சில ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்தி முற்றிலும் ஆதாரமற்ற செய்திகள என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.
அத்துடன் இவ்வாறான பொறுப்புணர்வற்ற செய்தியிடலை உயர்ஸ்தானிகராலயம் கண்டிக்கும் அதேவேளை, சம்பந்தப்பட்டதரப்பினர் வதந்திகளை பரப்புவதை தவிர்க்கவேண்டுமெனவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் கேட்டுக்கொண்டுள்ளது.
அதேவேளை இந்திய இராணுவத்தைச் சேர்ந்த எவரும் நாட்டுக்குள் நுழைய வில்லை எனவும் இது தொடர்பில் சில இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்பட்டு வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது என்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மறுத்து அறிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
இலங்கையில் இந்திய இராணுவத்தை சேர்ந்த எவரும் தரையிறங்கவில்லை; பாதுகாப்பு அமைச்சு விசேட அறிக்கை!