மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!
இலங்கையில் அமைந்துள்ள அலுவலகங்களில் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் கீழ் தன்னியக்க தொடர்பு கட்டமைப்பொன்றும், இணையத்தளம் ஒன்றும் புதிதாக (https://dmtappointments.dmt.gov.lk) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. அதன்படி, சேவையை பெற்றுக் கொள்வதற்கு முன்னரே ஒரு திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக்கொண்டு வருகை தருமாறு அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. இன்றைய தினத்தில் இருந்து இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இதற்கு முன்னர் குறித்த திணைக்களத்தின் நாரஹேன்பிட மற்றும் வேரஹெர அலுவலகங்களில் சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 0112 67 78 77 என்ற தொலைப்பேசி இலக்கம் இன்றைய தினத்தில் இருந்து பயன்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.