கல்வி அமைச்சின் அறிவிப்பால் ஆசியர்கள் விசனம்
பாடசாலைகளில் இந்த ஆண்டுக்கான பாடத்திட்டத்தை முழுமைப்படுத்த வேண்டுமென கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் இந்த அறிவிப்பால், ஆசிரியர்களும், மாணவர்களும் பெரும் அசௌகரி யங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
அதோடு மாணவர்களின் பாடத்திட்டத்தை முழுமைப்படுத்த போதியளவு காலம் இல்லை என்று கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அதன் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
தமக்கு கிடைக்க வேண்டிய பத்தாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு கோரி கல்வி கூட்டுறவு பொது சேவைகள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை, எதிர்காலத்தில் மேலும் கடுமையாக்கப்படும் எனவும் சங்கத்தின் தலைவர் நந்தன ஹேவகே தெரிவித்துள்ளார்.