யாழில் அன்னை பூபதி நினைவேந்தல் ஊர்வலம் ஆரம்பம்
அன்னை பூபதியின் 38வது நினைவாண்டினை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்தினை தாங்கிய ஊர்தியானது இன்றையதினம் யாழ்ப்பாணம் நல்லூர் - தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் இருந்து புறப்பட்டுள்ளது.
இந்த ஊர்தியானது வடக்கு - கிழக்கு முழுவதும் ஊர்வலமாக வந்து, இறுதி நாளில் மட்டக்களப்பில் உள்ள தியாகி அன்னை பூபதியின் சமாதி அமைந்துள்ள பகுதியை சென்றடையவுள்ளது. அதன் பின்னர் அங்கு இறுதி நாள் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அன்னை பூபதி, மட்டக்களப்பில் இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக சாகும் வரை உண்ணாநிலையிருந்து ஏப்ரல் 19 ஆம் திகதி 1988 இல் உயிர் நீத்தார்.
அன்னை பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. பத்துப்பிள்ளைகளின் தாய். மட்டக்களப்பு - அம்பாறை அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளரும் ஆவார்.

