அங்காடித்தெரு கனவு நிறைவேறுகிறது ; இயக்குநர் வசந்தபாலன் நெகிழ்ச்சி!
அங்காடித்தெரு கனவு மெல்ல நிறைவேறுவதாக இயக்குநர் வசந்தபாலன் நெஇகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் வணிக நிறுவனங்கள், துணிக்கடைகள், நகைக் கடைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் இருக்கைகளில் அமர்ந்து பணியாற்ற சட்டப்பேரவையில் நேற்று சட்டத்திருத்தம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சட்ட முன்வடிவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திட்டக்குடி கணேசன் சட்டப் பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். இயக்குநர் வசந்தபாலனின் அங்காடித் தெரு திரைப்படத்தில் தொடர்ந்து நின்று கொண்டே வேலை செய்வதால் பணியாளர்களுக்கு கால்களில் ஏற்படக்கூடிய வெரிக்கோஸ் நோய் பற்றி அந்த படத்தில் கூறியிருப்பார்.
இந்நிலையில் தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் வணிக நிறுவனங்கள், துணிக்கடைகள், நகைக் கடைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் இருக்கைகளில் அமர்ந்து பணியாற்ற சட்டத்திருத்தம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சட்ட திருத்தத்தைத் தாக்கல் செய்திருப்பதற்கு சமூக வலைதளத்தில் பலரும் வரவேற்பு அளித்துள்ளனர்.