ஆனந்த பாலிதவுக்கு விளக்கமறியல் உத்தரவு
ஊழியர்களுக்கான மேலதிக நேரக் கொடுப்பனவுகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐக்கிய கூட்டு தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் .
ஆனந்த பாலிதவை, எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிதி முறைகேடுகள்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஊழியர்களுக்கான மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வழங்கியதில் நிதி முறைகேடுகள் இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில் முறைகேடான வகையில் மேலதிக நேரக் கொடுப்பனவுகளைப் பெற்று, அரச நிதிக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறி முன்னெடுக்கப்படும் விசாரணையின் ஒரு பகுதியாக ஆனந்த பாலித கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கொடுப்பனவு மோசடி தொடர்பில் சுமார் 31 இலட்சத்து 11 ஆயிரம் ரூபாய் நிதி முறைகேடு இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நவம்பர் 16ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர், விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.