நீண்ட நாட்காளின் பின் இறுதிக் கிரியையில் சந்தித்த அண்ணன் ,தம்பி!
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் மனைவி விஜேவர்தன சந்திரா மாலினியின் இறுதிச் சடங்கில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
ராஜபக்ச சகோதரர்களுக்கு இடையில் அரசியல் ரீதியான பிளவு ஏற்பட்டுள்ளதாகப் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மஹிந்த மற்றும் கோட்டாபய இறுதி அஞ்சலி
மெதமுலனவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக இல்லத்திற்கு நேற்று (16) கொண்டு வரப்பட்ட பூதவுடலுக்கு மஹிந்த மற்றும் கோட்டாபய ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மற்றுமொரு சகோதரரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச அமெரிக்காவில் இருப்பதால் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 18ஆம் திகதி மெதமுலன குடும்ப மயானத்தில் நடைபெறவுள்ளன. இந்த ஒன்றுகூடல், ராஜபக்ச குடும்பத்தினரிடையே பிளவு நிலவுவதாக வெளியான தகவல்கள் தொடர்பில் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.