இரண்டு உலக போர்களை கடந்த மூதாட்டி: பகிரப்பட்ட நீண்ட ஆயுளுக்கான ரகசியம்
இங்கிலாந்தின் யார்க்ஷையர் பகுதியை சேர்ந்த எடித் ஹில் என்ற 106 வயது மூதாட்டி தனது மகிழ்ச்சியான வாழ்க்கையின் ரகசியம் குறித்து பகிர்ந்துள்ளார்.
1919-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி பிறந்த இவர் தனது வாழ்க்கையில் இதுவரை இங்கிலாந்தில் 23 பிரதமர்கள் ஆட்சிக்கு வந்துள்ளதை கண்டுள்ளாராம்.
இரண்டு உலக போர்கள்
இரண்டு உலக போர்களை கடந்து வந்திருக்கிறார்.5 மன்னர்களின் ஆட்சியையும் கண்டுள்ளார்.
இவர் இனிப்புகளை விரும்பி சாப்பிடுகிறார். நிறைய சாக்லேட் சாப்பிடுவது, விருந்துகளுக்கு சென்று மகிழ்ச்சியாக இருப்பது ஆகியவை தான் எனது நீண்ட ஆயுளுக்கு பங்களிப்பதாக கூறியுள்ள எடித் ஹில், தான் ஒருபோதும் புகைபிடித்ததில்லை, அதிக அளவு மது அருந்தியதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சாக்லேட் மட்டுமல்லாது, ஈஸ்டர் பண்டிகையின் போது இனிப்பு வகைகளை விரும்பி ருசிப்பதாகவும் கூறுகிறார்.