வவுனியா சிறைச்சாலையில் திடீரென உயிரிழந்த கைதி!
வவுனியா சிறைச்சாலை கைதியொருவர் இன்று மாலை மரணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது,
வவுனியா பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற நிலையில் குறித்த கைதி மரணமடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் மாலில்வத்தை கண்டியை சேர்ந்த 62 வயதான இ.சேகர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
முல்லைத்தீவில் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் தண்டனையை அனுபவித்து வந்த குறித்த நபர் இன்று (04-01-2023) பிற்பகல் அதிக சளி காரணமாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே, குறித்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்ததன் பின்னர் மரணித்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விசாரணைகளை மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டு வருகின்றார்.