இலங்கைக்குள் நுழைந்த முக்கியஸ்தர்!
அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் (Robert Kaproth) இன்று (25) இலங்கை வந்தடைந்தார்.
இது குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் ( Julie Chung) தனது டுவிட்டர் செய்தியில் ,
ரொபர்ட் கப்ரோத் (Robert Kaproth) தனது விஜயத்தின் போது இலங்கை அரசாங்கம் மற்றும் பொருளியல் தலைவர்களைச் சந்திப்பார் எனத் தெரிவித்துள்ளார்.
Today, I welcomed back @USTreasury Dep Asst Sec Robert Kaproth to Sri Lanka. Dep Asst Sec Kaproth is here to meet with government & economic leaders to discuss the way forward on economic recovery for Sri Lanka. pic.twitter.com/IwyjvBvciI
— Ambassador Julie Chung (@USAmbSL) October 25, 2022
அதோடு இலங்கையின் பொருளாதார மீட்சியில் முன்னோக்கிச் செல்லும் வழி குறித்து கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்படும் என அவர் ( Julie Chung) மேலும் தெரிவித்தார்.