அம்பாறையில் பேருந்து விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழப்பு
அம்பாறை கல்முனை பிரதான வீதியிலுள்ள நிந்தவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மாட்டுபாளையம் பகுதியில் பஸ்வண்டியுடன் மோட்டர்சைக்கிள் ஒன்று மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
இன்று பிற்பகல் (06) இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் பஸ்வண்டியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணை
நிந்தவூர் 5 ம் பிரிவைச் சேர்ந்த 72 வயதுடைய வயோபதிபரே இவ்வாறு உயிரிழந்தார்.
பொத்துவில் இருந்து கல்முனை நோக்கி பிரயாணித்த தனியார் பஸ்வண்டி, நிந்தவூர் மாட்டுபாளையம் சந்திக்கு அருகில் சம்பவதினமான இன்று பிற்பகல் 11.30 மணியளவில் அதே திசையில் பிரயாணித்த மோட்டர் சைக்கிள் வீதியின் வலது பக்கம் திரும்பிய நிலையில், பின்னால் வந்த பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற வயோதிபர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நிந்தவூர் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாகவும் பேருந்து சாரதியை கைது செய்துள்ளதாகவும், பொலிசார் தெரிவித்தனர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.