மனிதன் உயிர் வாழ தகுதியற்றதாக மாறப்போகும் பூமி
அடுத்த 200 வருடங்களில் பூமி மனிதன் வாழ்வதற்கு தகுதியற்றதாக மாறப்போவதாக புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவின் சுற்றுச்சூழல் மற்றும் நீரியல் மையத்தின் டாக்டர் நிக்கோலஸ் கோவன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்விலேயே இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மனிதர்கள் அதிகளவு மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு வாயுக்களை வெளியிடுவதால் புவி வெப்பமடைவது அதிகரித்து வருகிறது, இதனால் கடல்கள் வேகமாக ஆவியாகி வருகின்றன.
பசுமை இல்லா வாயு
அத்தோடு, நீராவி வானத்தை நோக்கிச் சென்று போர்வையைப் போல மூடுகிறது, இதன் காரணமாக பூமியில் உள்ள வெப்பம் வளிமண்டலத்தில் கலக்காமல் பூமி வெப்பமடைவது தொடர்ந்து அதிகரிக்கிறது.
இந்நிலையில், பூமி வெப்பமடைவதால், கடல்களில் உள்ள நீர் தொடர்ந்து மறைந்துவிடும் என்றும், சில ஆண்டுகளில், கடல்கள் முற்றிலும் ஆவியாகிவிடும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
சூரியனில் இருந்து வரும் கதிர்வீச்சு மெதுவாக அதிகரித்து வரும் நிலையில், பூமியின் வெப்பநிலையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
தொடர்ந்து அதிகரித்து வரும் புவி வெப்பமடைதல், கடல் ஆவியாதல் போன்றவை 200 வருடங்களில் பூமியில் பசுமை இல்லா வாயுக்களை அதிகரித்து, கொஞ்சம் கூட குறைக்க முடியாத நிலையை எட்டிவிடும் என்று இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதனால், அடுத்த 200 ஆண்டுகளில் பூமி வெள்ளி கிரகம் போல் மாறி, மனிதர்கள் வசிக்கத் தகுதியற்றதாக மாறிவிடும் என்று கூறப்படுகிறது.