யாழில் பச்சிளம் குழந்தையின் உயிரைப் பறித்த விபத்து; வெளியான புகைப்படம்
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தந்தையுடன் பச்சிளம் குழந்தையும் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புகையிரதத்துடன் வானொன்று மோதி இந்த விபத்து ஏற்பட்ட நிலையில் , விபத்தில் வானில் பயணித்த மூவரில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று மாலை(14) இடம்பெற்ற இவ் விபத்தில் இணுவில் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய சயந்தன் மற்றும் அவரது மகளான 6 மாத குழந்தை அப்சரா ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
குழந்தையின் தாயார் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.
இதேவேளை விபத்து இடம்பெற்ற இடத்தில் புகையிரத கடவை காப்பாளர் இல்லாதமையே இப் விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.