42 வயது மாஸ்டரை கரம்பிடித்த 18 வயது மாணவி!(Video)
42 வயது மாஸ்டரை 18 வயது மாணவி ஒருவர் திருமணம் செய்துள்ள சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்தியாவின் பீகாரைச் சேர்ந்தவர் 18 வயது சுவேதா, இவருக்கு ஆங்கில மொழியை பேச முடியாமல் தவித்து வந்துள்ளார். தனது தோழிகள் ஆங்கிலத்தில் பேசியதை கண்டு அவருக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஆங்கில பயிற்சி மையத்தில் சேருவதற்கு முடிவு செய்துள்ளார் சுவேதா. பின்னர் பீகாரில் உள்ள சமஸ்திப்பூர் ஆங்கில பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளார்.
காதல்
அங்கு அவருக்கு 42 வயதுடைய சங்கீத் குமார் என்ற ஆசிரியர் ஆங்கில பாடம் கற்றுக் கொடுத்துள்ளார். அப்போது மாணவி சுவேதாவுக்கும், ஆசிரியர் சங்கீத் குமாருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
न उम्र की सीमा हो! बिहार के समस्तीपुर में 42 साल के टीचर को 20 साल की स्टूडेंट से प्रेम हो गया..दोनों ने राजी खुशी विवाह रचाया..वीडियो खूब वायरल हो रहा..लोग मटुकनाथ और जूली की प्रेम गाथा को याद कर रहे..वीडियो-श्री राजपूत..Edited By- @Sinhamegha8 pic.twitter.com/dVp0KfoJGW
— Prakash Kumar (@kumarprakash4u) December 10, 2022
இதையடுத்து இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்ட சம்பவம், திருமணம் ஆகாது காத்திருக்கும் 90ஸ் கிட்ஸ்களை கடுப்பேத்தியுள்ளதாம்.