வன்புனர்வில் ஈடுபட்ட 18 வயதுடைய சிறுவன் விளக்கமறியலில்
மட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோம் செய்த 18 வயது இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளது.
குறித்த சிறுமியை காதலித்துவந்த இளைஞர், திருமணம் செய்துகொள்வதாக கூறி சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
அதனையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை (25.082023) பொலிஸார் அந்த இளைஞரை கைது செய்ததுடன் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இந்நிலையில், கைதான இளைஞர் நேற்று வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் (07.09.2023) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.