கல் வீழ்ந்து 11 வயது சிறுவன் ஒருவன் உயிரிழப்பு
வீடொன்றுக்கு அருகில் தலையில் கல் வீழ்ந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக நூரிய பொலிஸார் தெரிவித்தனர். கேகாலை நூரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லேஹாகே பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கித்துல்கல பல்லேஹாகே பிரதேசத்தை சேர்ந்த 11 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தின் போது, உயிரிழந்த சிறுவனின் தந்தை வீட்டின் மேல் பகுதியில் உள்ள மலைப்பாதையை சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளார்.
இதன்போது, வீட்டிற்கு அருகில் இருந்த சிறுவனின் தலையில் கல் வீழ்ந்துள்ள நிலையில் காயமடைந்த சிறுவன் தெரணியகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.