பணக்காரர் ஒருவரின் வாக்குறுதியால் பறிபோன ஏழையின் உயிர்! சோக பின்னணி
அமெரிக்காவில் கடும் பனி இரவில் தன் வீட்டின் முன் ஏழை மனிதர் ஒருவர் உயிருக்கு போராட்டிக் கொண்டிருந்ததை செல்வந்தர் ஒருவர் அவதானித்துள்ளார்.
பின்னர் கடும் பனியால் போராட்டிகொண்டிருந்த முதியவரின் அருகில் சென்று அவரிடம் வினவியுள்ளார்.
குறித்த முதியவரிடம் வெளியே குளிர் அதிகமாக இருக்கிறது, உங்களிடம் சூடான உடைகள் இல்லையா? உங்களுக்கு குளிர் இல்லையா? என கோட்டுள்ளார்.
அதற்கு முதியவர் என்னிடம் சூடான உடைகள் இல்லை, ஆனால் நான் இப்போது இந்த குளிருக்கு பழக்கப்படுகிறேன் என கூறியுள்ளார்.
இதன்போது குறித்த செல்வந்தர் நான் வரும் மட்டும் காத்திருங்கள், நான் உங்களுக்கு ஆடையை எடுத்துவருகின்றேன் என சொல்லி சென்றுள்ளார். இதனால் இந்த ஏழை மனிதன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்துள்ளார்.
மேலும் அவர் வருகிக்காகக் காத்துக் கொண்டிருந்தார். இதேவேளை செல்வந்தர் தன் வேலையால் ஏழை மனிதனை மறந்துவிட்டார். காலையில் ஏழை மனிதனின் நினைவு வர குறித்த பாணக்காரர் உடனடியாக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் அந்த ஏழை மனிதன் குளரால் இறந்துவிட்டார்.
இதன்போது அந்த ஏழை மனிதனின் கையில் எழுதப்பட்டிருந்தது,
எனக்கு சூடான உடைகள் இல்லாத போது கூட நான் குளிருக்கு போராட முடிந்தது. ஆனால் நீங்கள் எனக்கு உதவ வாக்குறுதி அளிக்கும் போது நான் உங்கள் வாக்குறுதிக்கு அடிமையாகி நான் குளிருக்கு எதிராக இருக்கும் திறனை இழந்துவிட்டேன் என எழுதி இருந்தார்.
வாக்குறுதி அளிக்கும் முன் பொய்யான வாக்குறுதிகளை உருவாக்கும் முன் யோசியுங்கள்.. அதுவே ஒருவரின் மரணத்திற்கு கூட காரணமாக இருக்கலாம்.