இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள முக்கிய தீர்மானம்!
இலங்கை எதிர்க்கொண்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நிலையில், பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் உள்ள சகலவிதமான பொருளாதார நடவடிக்கைகளுக்கும் எரிபொருள் அத்தியாவசியமாகையால், பொருளாதார செயன்முறையில் தெரிவு செய்யப்பட்ட விசேடமான துறைகளில் தமக்குத் தேவையான எரிபொருட்களை தனித்தனியாக இறக்குமதி செய்து பயன்படுத்துவதற்கான அனுமதிப்பத்திரம் ஒன்றை வழங்குவது உகந்ததென கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெற்றோலியப் பொருட்கள் இறக்குமதிக்காக முறையான வகையில் அடையாளங் காணப்படும் தரப்பினர்களுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு இயலுமை கிட்டும் வகையில் 2002 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.