அம்புலுவாவ கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டது
கம்பளை - அம்புலுவாவ மலையில் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுற்றாடல் அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு அறிவித்துள்ளது.
நிபுணர்களிடம் இருந்து முறையான அறிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டு, அபாயநிலை குறித்து இறுதித் தீர்மானம் எட்டப்படும் வரை கட்டுமானப்பணிகள் நிறுத்தபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட நிபுணர் குழு
அம்புலுவாவ சுற்றாடல் வலயத்தின் முகாமைத்துவத்தில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து விசாரணை செய்வதற்காக சுற்றாடல் அமைச்சை பிரதிநிதித்துவப்படுத்தி விசேட நிபுணர் குழுவொன்றை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக துறைசார் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், சுற்றாடல் அமைச்சின் ஆலோசனைக்கமைய மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து அம்புலுவாவ சுற்றாடல் வலயத்தை அவதானிப்பதற்காக எதிர்வரும் நாட்களில் கள விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.