மருந்துகளுடன் சென்ற நோயாளர் காவு வண்டி விபத்து ; சாரதி சம்பவ இடத்திலேயே பலி
குருநாகலிலிருந்து மீகலாவ மருத்துவமனைக்கு மருந்துகள் மற்றும் எழுதுபொருட்களை ஏற்றிச் சென்ற நோயாளர் காவு வண்டி ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில், அதன் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து, இன்று (10.09.2026) பிற்பகல் சுமார் 3.30 மணியளவில், பாதெனிய – அனுராதபுரம் வீதியில் உள்ள கத்தபஹுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குருநாகலிலிருந்து மீகலாவ மருத்துவமனைக்கு மருந்துகள் மற்றும் எழுதுபொருட்களை ஏற்றிச் சென்ற நோயாளர் காவு வண்டியே இவ்வாறு லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தின் தாக்கம் காரணமாக நோயாளர் காவு வண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும், நோயாளர் காவு வண்டியில் பயணித்த நால்வரும், லொறியில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக மீட்கப்பட்டனர்.
காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக அம்பன்பொல மற்றும் கல்கமுவ மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.