அம்பலாங்கொடையில் அடுத்தடுத்து இடம்பெற்ற பயங்கர சம்பவம்: இருவர் பலி
அம்பலாங்கொடை, கலகொட பிரதேசத்தில் இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இன்றைய தினம் (27-07-2022) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதன்போது, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த இருவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கலகொட குளிகொட பகுதியைச் சேர்ந்த 49 மற்றும் 44 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் (26-07-2022) அம்பலாங்கொடை உரவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கும் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.