விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி!
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க (Mayantha Dissanayake) விலகியுள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

மயந்த இதுவரையில் வகித்து வந்த, ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அமைப்பின் பதவியிலிருந்து மாத்திரமே விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்ட அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காகவே அவர் இந்த பதவியிலிருந்து விலகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அமைப்பின் பிரதி தலைவர் ரெஹான் ஜயவிக்கிரம (Rehan Jayawickreme) தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
Contrary to certain “tabloid” reports, SJB MP @MayanthaD has not decided to leave the party.
— Rehan Jayawickreme (@RehanJayawick) July 21, 2022
He resigned as Chairman @youthforsjb to focus on a new electorate targeting the next General Elections.
I would like to take this opportunity to thank him for steering @youthforsjb ??