இலங்கையில் சாப்பாடு இல்லை என்றாலும் மதுபானம் இருக்க வேண்டும்! வைரலாகும் வீடியோ
சாப்பிட இல்லை என்றாலும் எமக்கு குடிப்பதற்கு மதுபானம் இருக்க வேண்டும். மது அருந்துபவன் எப்போது மது உலகில், அருந்தாவன் சுவர்க்க லோகத்தில்.
இதனை அறிந்தே ஏழு மூளை இருக்கும் பசில் ராஜபக்ச, மதுபான கடைகளை திறக்க அனுமதி வழங்கியுள்ளார் என இலங்கை பொது மகன் ஒருவர் வெளியிட்டுள்ள காணொளியில் தெரிவித்துள்ளார். மது கடைகள் திறந்து தனக்கு தெரியாது என்கிறார் கலால் திணைக்கள ஆணையாளர்.
பாவம் அவர் பச்சை பிள்ளை.பொருட்களை வங்க மனைவி பணம் கொடுத்தார். நான் கீல்ஸூக்கு வந்தேன். பார்த்தால் மதுபான கடைகள் திறந்து இருக்கின்றன.
கொஞ்சமாக வீட்டுக்கு பொருட்களை வாங்கினேன். எனக்கு தேவையான மதுபான போத்தல்களை வாங்கினேன். வீட்டுக்கு தேவையான பொருட்களை விட மதுபானம் அவசியம். நாட்டின் காணப்படும் நிலைமைக்கு அமைய மது அருந்துவது அவசியமானது என அந்த பொது மகன் கூறியுள்ளார்.