லொத்தர் சீட்டின் விலையை இரட்டிப்பாக்க அனுமதி
லொத்தர் சீட்டின் விலையை இரட்டிப்பாக்க திறைசேரியின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தேசிய லொத்தர் சபை தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்காலத்தில் லொத்தர் சீட்டின் விலை 40 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஒரு லொத்தர் சீட்டு 20 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு லொத்தர் சீட்டுகளில் வழங்கப்படும் பரிசுத் தொகையும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய லொத்தர் சபை தெரிவித்துள்ளது.
ஜூலை 6ம் திகதி முதல் உரிய விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டிருந்தாலும் அது மீண்டும் பரிசீலிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி விலை அதிகரிப்பு அமுலுக்கு வரும் திகதி தொடர்பில் இந்த வாரத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தேசிய லொத்தர் சபை தெரிவித்துள்ளது.