ஓய்வு பெற உள்ளோரை சேவையில் இணைக்க அனுமதி
நாட்டில் ஓய்வு பெற உள்ளோரை சேவையில் இணைத்துக் கொள்ள அனுமதி வாழங்கப்பட்டுள்ளது.
ஓய்வூதிய வயதை 65 ஆக உயர்த்துவதற்கான வரவு செலவுத் திட்ட நடவடிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி வரை ஓய்வுபெற்ற அல்லது ஓய்வுபெறும் அதிகாரிகளை மீண்டும் பணியில் அமர்த்துவது அவசியமாகும், அதற்கு ஸ்தாபன தலைவரின் அனுமதி தேவை என்று ஜே.ஜே.ரத்தினசிறி தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை ஜனவரி 1 ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டாலும், ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டுமானால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அல்லது நடவடிக்கை தாக்கல் செய்யப்பட்ட நவம்பர் 12 முதல் ஓய்வு பெற வேண்டும் என்று ஓய்வூதியத் துறை அமைச்சகத்திற்கு தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலைமைக்கு மத்தியில் இந்த அதிகாரிகளை சேவைக்கு நியமிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று செயலாளர் அதன் கருத்துரையில் தெரிவித்தார்.