இனவாத அடிப்படையிலான தலையீடுகள் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள்
இலங்கையின் நீதித்துறைக்குள் இனவாத அடிப்படையிலான தலையீடுகள் தொடர்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
அண்மையில் புதிதாக மேற்கொள்ளப்பட்ட உயர்நீதிமன்ற நீதியரசர்களின் நியமனத்தில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் எம்.டி.எம். லபார் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
தற்போது வெற்றிடமாகவுள்ள நான்கு உயர்நீதிமன்ற நீதியரசர் பதவிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் முன்மொழியப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களை நியமிக்க அரசியலமைப்பு பேரவை கடந்த வாரம் அனுமதி வழங்கியது.
அதற்கமைய, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான ஆர்.எம்.சோபித ராஜகருணா, மேகன விஜேசந்தர, சம்பித பி. அபேயகோன் மற்றும் எம்.சம்பித கே.பி. விஜேரத்ன ஆகியோர் ஜகாதிபதி முன்னிலையில் உயர்நீதிமன்ற நீதியரசர்களாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
இவர்களில் , மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் சிரேஸ்டத்துவத்தில் 3ஆவது சிரேஸ்டத்துவத்திலுள்ள நீதியரசர் லபார், உயர்நீதிமன்ற நீதியரசர் பதவிக்கு ஜனாதிபதியினால் முன்மொழியப்படவில்லை.
உயர்நீதிமன்ற நீதியரசராக தற்போது இவர் நியமிக்கப்படாமையினால் எதிர்வரும் ஜுன் மாதம் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக ஓய்வுபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.