வெளிவிவகார அமைச்சின் அனைத்து அலகுகளும் ஒரு கட்டிடத்தில்!
தற்போது வெளிவிவகார அமைச்சு இயங்கி வருகின்ற ஜனரஜ கட்டிடத்தில் போதுமானளவு இடவசதியின்மை காணப்பட்டுகின்றது. இதன் காரணமாக , குறித்த அமைச்சின் சில அலகுகள் தலைமைக் காரியாலயத்திற்கு வெளியே சில இடங்களில் நடாத்திச் செல்லப்படுகின்றது.
இந்நிலையில் பல்வேறு நிர்வாகப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. அவ்வாறே, சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் வெளிவிவகார அமைச்சுக்கு போதியளவு வசதிகளுடன் கூடிய கட்டிடமொன்று நிர்மாணிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய புதிய கட்டிடத்தை நிர்மாணிப்பதற்குத் தேவையான காணியை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வித்யா மாவத்தையில் அமைந்துள்ள தற்போது தொழிநுட்பவியல் நிறுவனத்தால் பயன்படுத்தப்படுகின்ற காணியிலிருந்து ஒதுக்கிக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக கூறப்படுகின்றது.