மாதம் இரண்டு தடவைகள் வெளிநாடு சென்ற அலி சப்ரி; எம்.பி. வெளியிட்ட தகவல்!
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் வெளிநாடு சென்றுள்ளதாகவும், இந்த மாதத்தில் மாத்திரம் ஐந்து தடவைகள் வெளிநாடு சென்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒவ்வெரு மாதமும் குறைந்தது இரண்டு தடவைகளேனும் இவர் பிரமுகர் பிரதேசத்தினூடாக வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். இந்த மாதத்தில் மாத்திரம் ஐந்து தடவைகள் வெளிநாடு சென்றுள்ளார்.
அதன்படி தேர்தல் தினத்தன்று வந்தார். அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்கிறார். நான் அந்த தலைவருக்கு கூறினேன். இந்த தலைவருக்கு கூறினேன், அவர்கள் அதற்கு செவிசாய்க்கவில்லை.
அதனால், அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்ததாக அவர் கூறுகிறார். மிகவும் அழகான கதை ஒன்றே இது. சிறந்த நடிகருக்கான விருது இவருக்கு வழங்கப்படவேண்டும்.
இவர் அடுத்த நாளே டுபாய்க்கு சென்றுள்ளார் என்பதை நீங்கள் நம்ம வேண்டும். அவருக்கு மனச்சாட்சி இருந்தால் அவர் பதவியில் இருந்து விலகவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.