மதுவினால் இடம் பெற்ற கொலைச் சம்பவம்
ஒன்றாக மது அருந்திக்கொண்டிருந்த போது இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் ஏற்பட்டுள்ளது.
இம் மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற இடம்
இச் சம்பவம் நேற்று இரவு புபுரஸ்ஸ காவல் பிரிவுக்குட்பட்ட லெவலன் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதே பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 05 பேர் கைது செய்யப்பட்டதாக புபுரஸ்ஸ காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை மோதலில் காயமடைந்த ஏனைய மூவரும் கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புபுரஸ்ஸ காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.