குடும்பஸ்தரின் உயிரை குடித்த மது விருந்து ; தீவிரமடையும் விசாரணை
ஹொரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெபெல்லகொட பகுதியில் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டினைத் தொடர்ந்து நேற்றையதினம் ஹொரணை பொலிஸ் நிலையத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
சம்பவத்தில் உயிரிழந்தவர் ஹொரணை – கெபெல்லகொட பகுதியை சேர்ந்த 66 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், உயிரிழந்தவர் தமது வீட்டின் அருகிலுள்ள வீடொன்றில் மது அருந்திகொண்டிருந்தபோது, அங்கிருந்த நபரொருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்து, பின்னர் குறித்த நபர், உயிரிழந்தவரை கூரிய ஆயுதங்களால் தாக்கியதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் நீதவான் விசாரணைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணை நடவடிக்கைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.