மதுகொடுத்து பாலியல் துஸ்பிரயோகம்; உறவினரை நம்பிச் சென்ற யுவதிக்கு நேர்ந்த கொடுமை
19 வயது யுவதியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் ஆடை வடிவமைப்பாளர் ஒருவரை மாவத்தகம பொலிஸ் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது. மாவத்தகம பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாவத்தகம பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடையவர் என்றும் அவர், இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் கூறொஇயுள்ளனர்.
பாலியல் பலாத்காரம்
அதேவேளை சந்தேக நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் 19 வயதுடைய சிறுமி சந்தேக நபரின் உறவினர் என மாவத்தகம பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட இளம் பெண் தனது உறவினரிடம் ஆடை வடிவமைப்பு (பேஷன் டிசைனிங்) பற்றி அறிந்து கொள்வதற்காக பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதாக பொலிஸார் கூறுகின்றனர்.
பயிற்சி வகுப்பு முடிந்ததும், பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மற்றொரு பெண்ணுடன் வகுப்பை விட்டு வெளியேறச் சென்றபோது, மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
இதனையடுத்து வகுப்பில் சிறிது நேரம் தங்கியிருந்த இரண்டு இளம் பெண்களிடம், சந்தேக நபர் குடிப்பதற்கு ஏதாவது எடுத்து வரவா? எனக் கேட்டுள்ளனர். அவ்விரு பெண்களும் அதற்கு ஆமோதித்தனர்.
வெற்று போதலில் ஏற்கெனவே ஊற்றிவைத்திருந்த மதுவை, அந்த நபர் அருந்த கொடுத்துள்ளார். இரு யுவதிகளும் தங்களுக்குத் தெரியாமல் மது அருந்தியுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அதில் ஒரு குவளையை மட்டும் குடித்து விட்டு இளம்பெண் ஒருவர் வெளியேறியதுடன், சந்தேக நபர், தனது உறவினரான பெண்ணை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக தெரிவித்துள்ளார்.
இதனால் எவ்விதமான சந்தேகமும் வராமல் அந்த பெண்ணை நிறுத்திக்கொண்டுள்ளார். சந்தேக நபரும் இந்த மதுபானத்தை அருந்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
19 வயதுடைய சிறுமி பானமாக கருதி அதிக மதுபானம் அருந்தியதால் சோர்வடைந்த பின்னரே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் தனியார் வகுப்பறையில் இருந்து மேசைகள் கவிழ்ந்த சத்தம் கேட்டு கட்டிடத்தில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வந்த சிலர், வகுப்பறைக்குச் சென்று பார்த்ததுள்ளனர்.
அப்போது, இளம் பெண்ணொருவர் நிர்வாணமாக இருந்துள்ளார். சம்பவத்தை கண்டு இளம் பெண்ணை காப்பாற்ற முயன்றனர், ஆனால் சந்தேக நபர் அந்த இளைஞர்களை விடாத நிலையில் , அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பிடித்து வைத்துக்கொண்டுள்ளார்.
யுவதியைக் கொன்றுவிடுவார் என்ற சந்தேகத்தின் பேரில் இளைஞர்கள் சந்தேகநபரை கட்டையால் தாக்கியுள்ளனர். அந்த நபர் கீழே விழுந்ததை அடுத்து, மிகுந்த பிரயத்தனப்பட்டு யுவதியை அவர்கள் மீட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.