உக்ரைன் முழுவதும் ஒலித்த அபாய மணி; பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை!
ரஷ்யா - உகரைன் போர் இன்னும் முடிவுக்கு வராமல் உள்ள நிலையில் உக்ரைன் முழுவதும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவகள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில் உக்ரேனிய செய்தி நிறுவனமான Kyiv Independent, நாட்டின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் வான்வழி தாக்குதல் சைரன்கள் ஒலிப்பதாக தெரிவித்துள்ளது. இதேவேளை, கியேவ் விமான நிலையத்திற்கு அருகில் வசிக்கும் பொதுமக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Kyiv க்கு வெளியே உள்ள நகரமான Boryspil இன் மேயர், உக்ரைனின் முக்கிய சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பொதுமக்களை வெளியேறுமாறு கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறுவது, உக்ரேனியப் படைகள் அப்பகுதியில் செயல்படுவதை எளிதாக்கும் என்றும் Boryspil இன் மேயர் கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலினால் உக்ரைன் சின்னாபின்னமாகியுள்ள நிலையில் பல்லாயிரங்க்கண்க்காண் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சமைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.