இந்தியாவின் உள் விவகாரங்களில் முக்கை நுழைக்கும் அல்கொய்தா!
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரத்தில் கோஷமிட்ட மாணவி ஒருவரை அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி (Ayman Al-Zawahiri) பாராட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த காணொளியில்,
“ஹிஜாப் தொடர்பான அடக்குமுறைக்கு எதிர்வினையாற்ற வேண்டும். இந்தப் பெண் குறித்து சமூக வலைதளங்களில் வெளியான காணொளிகளை பார்த்தேன்.அவரது துணிவு குறித்து அறிந்து கவிதை எழுதி பாராட்ட முடிவு செய்தேன் என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இந்தியாவின் உள் விவகாரங்களில் அல்-கொய்தா அமைப்பின் தலைவர் கருத்து தெரிவித்துள்ளமைக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அல்கொய்தாவோடு தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், தங்களை அமைதியாக வாழ விடுமாறும் ஹிஜாப் விவகாரத்தில் கோஷமிட்ட மாணவியின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.