அக்குரேகொட இரட்டைக் கொலை; விசாரணைகள் நிறைவு
அக்குரேகொட பிரதேசத்தில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி கொலைச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தற்போது 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை நடைபெற்று மூன்று நாட்களுக்குள் பிரதான துப்பாக்கிதாரி உட்பட ஐவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களுள் மூவர் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதோடு, ஏனையோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் சில சந்தேக நபர்களை கைது செய்ய 12 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.