நாளை செல்வத்தை அள்ளி தரும் “அட்சய திருதியை”; என்ன செய்யலாம்!
சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் திருதியை “அட்சய திருதியை” என்று அழைக்கப்படுகிறது. அட்சயம் என்றால் வளர்வது, பெருகுவது என்று அர்த்தம். அந்தவகையில் நாளையதினம் (10) அட்சய திருதியை நாளாகும்.
இந்த நாளில் செய்யும் கார்டியங்கள் அனைத்தும் சித்தி கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
செல்வத்தை அள்ளி தரும் சிறப்புமிக்க நாள்
அத்துடன் அடுத்தவர்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களை கொடுக்க வேண்டும். அதனால் அட்சய திருதியை அள்ள, அள்ள குறையாமல் புண்ணிய செல்வத்தை அள்ளி தரும் சிறப்புமிக்க திருநாள் என்று நம்பப்படுகிறது.
அட்சய திருதியை அன்று வஸ்திர தானம் செய்வது நல்லது. அன்னதானம் கொடுப்பதும் சிறப்பு.
அட்சய திருதியை தினத்தன்று வெண்மை நிறப் பொருட்கள் விசேஷமானது ஆகும். வெண்ணிற மல்லி பூ, வெண்பட்டு ஆடை, வெண்ணிற பால் பாயசம் இவைகளைப் பயன்படுத்துதல் சிறப்பாகும்.
என்ன வாங்கலாம்?
தங்கம் மட்டுமே வாங்க வேண்டும் என்றும், தங்கம் வாங்கினால்தான் தங்கும். அது மென்மேலும் பெருகும் என்பதில்லை. அன்றைய தினம் என்ன வாங்கினாலும் அது பல மடங்கு பெருகும் என்பதுதான் நம்பிக்கை.
அன்றைய தினம் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.