ஆணவத்தால் ஆடும் அக்ஷரா...பிக் பாஸ் வீட்டில் வெடித்த சண்டை
பிக் பாஸ் வீட்டில் நேற்றைய தின போட்டிக்கு பின் போட்டியாளர்கள் சிறிது ஓய்வெடுக்கலாம் என எண்ணிய தருணத்தில் பிக் பாஸ் புதிய டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதாவது கார்டன் ஏரியாவில் ஒரு பாக்ஸ் போட்டோ ஒட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. மணி அடித்தவுடன் போட்டியாளர்கள் அதை நகர்த்த வேண்டும். மீண்டும் மணி அடிக்கும் பொழுது யாருடைய போட்டோ மேல்நோக்கி இருக்கிறதோ அவர் போட்டியிலிருந்து விலக்கபடுவார் என்று பிக்பாஸ் அறிவிக்கிறார். அதன்போது பெட்டியின் மீது ராஜு அமர்ந்து கொள்கிறார்.
இதனால் அக்ஷரா கோபத்தின் உச்சிக்கு சென்றுவிடுகிறார். மேலும் இருவருக்கும் வாக்குவாதம் முற்றுகிறது. இதற்கிடையில் சமாதானம் செய்ய முயற்சிக்கும் ப்ரியங்கவை மரியாதை குறைவாக நடத்துகிறார் அக்ஷரா.
இதனால் ப்ரியங்கா அக்ஷராவிடம் சண்டையிடுகிறார். பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து கடுமையான போட்டிகள் வர இருப்பதால் இன்னும் இதுபோன்ற பல சண்டை காட்சிகளை நாம் பார்க்க இயலும்.
இன்று குழாயடி சண்டையாக இருக்கும் பிக்பாஸ் வீடு நாளை மீன் மார்க்கெட் சந்தையாக கூட மாறலாம்.