மீண்டும் கார் விபத்தில் சிக்கிய அஜித்
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித் விபத்தில் சிக்கிய போதிலும் அதிலிருந்து தப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் அஜித் குமார் கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார். போர்த்துகல் நாட்டில் நடந்த பந்தயத்தில் அஜித்தின் கார் விபத்தில் சிக்கியது. அதன்பின்னர் டுபாயில்(dubai) நடந்த போட்டியில் பங்கேற்ற அஜித்தின் கார் மீண்டும் விபத்தில் சிக்கியது.
இந்த நிலையில், மீண்டும் இப்போது கார் விபத்தில் சிக்கியிருக்கிறார் நடிகர் அஜித். ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் பந்தயத்தில் நடிகர் அஜித் ஓட்டிய கார் மீண்டும் விபத்துக்குள்ளானது.
பந்தயத்தில் ஈடுபட்டபோது மற்றொரு கார் குறுக்கே வந்து மோதியதில் அஜித் கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடிகர் அஜித்துக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.