அஜித் நிவாட் கப்ராலின் பதவி அநுரவுக்கு?
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் வகித்த நிதி இராஜாங்க அமைச்சுப் பதவி நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பாவுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கப்ராலின் வெற்றிடத்திற்கு ஏற்கனவே எம்.பியாக இருந்த ஜயந்த கெட்டகொட நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் இராஜாங்க அமைச்சுப் பதவியை ஏற்க விரும்பவில்லை என கூறப்படுகின்றது.
இதேவேளை கடந்த காலத்தில் இடர் முகாமைத்துவ அமைச்சு, பெற்றோலிய வளத்துறை அமைச்சு என பல்வேறு அமைச்சுப் பொறுப்புக்களை அநுர பிரியதர்ஷன யாப்பா , வகித்திருந்த போதிலும், தற்போதைய அரசாங்கத்தில் அவருக்கு எந்த அமைச்சுப் பதவியும் அளிக்கப்பட்டிருக்கவில்லை.
இந்த நிலையிலேயே அவருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவியை அளிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.