ஆக்சன் கிங் அர்ஜூனுடன் கைகோர்க்கும் வடசென்னை நாயகி
தமிழ் சினிமாவில் தமது அயராத முயற்சியினால் தமக்கென்ற ஓர் இடத்தைப் பிடித்த பல முன்னணி நடிகைகள் இருக்கின்றனர். இவர்களில் முக்கியமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
இவர் தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் இருப்பதும் தெரிந்ததே. மேலும் இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றார். இவர் நடித்த அனைத்துத் திரைப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்புப் பெற்று வருகின்றது. அத்தோடு தற்பொழும் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.
இந்த நிலையில். இயக்குனர் தினேஷ் லட்சுமணன் என்பவர் இயக்கும் அதிரடி ஆக்சன் திரைப்படத்தில் அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. அத்தோடு இந்த படத்தில் அர்ஜூன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் 59 வயதான அர்ஜுன் இளம் நடிகை ஒருவர் ஜோடியாக நடிக்க இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு ஆசிரியை கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகின்றது. அத்தோடு இந்த கேரக்டர் அவருக்கு சவால் மிகுந்ததாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது. மேலும் ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
