கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய யாழ்ப்பாண இளைஞன்!
போலியான ஆவணங்களை பயன்படுத்தி மலேசிய அதிகாரிகளை ஏமாற்றி மோசடியான முறையில் பெற்றுக்கொண்ட கடவுச்சீட்டை பயன்படுத்தி ஜோர்தான் செல்ல முயற்சித்த யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த இளைஞர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
குடி வரவு குடி அகழ்வு பிரிவினரால் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான சேவை
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 22 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
எயார் அரேபியா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான ஜி 9501 என்ற விமானத்தின் ஊடாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வழியாக ஜோர்டான் நோக்கி பயணம் செய்ய முயற்சித்தபோது காட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர்.
கடவுச்சீட்டு
இந்த இளைஞர் சமர்ப்பித்த கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் தொடர்பில் எழுந்த சந்தேகத்தை அடுத்து அது குறித்து விசாரணை செய்தபோது இவை போலி ஆவணங்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து குறித்த நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.