இலங்கை மிகவும் அபாய கட்டத்தில்; சர்வதேச நாணயநிதியத்துடன் விரைவில் ஒப்பந்தம்
இலங்கை சர்வதேச நாணயநிதியத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிலையை எட்டியுள்ளதாக ஜோர்ஜ்டவுன் பல்கலைகழக பேராசிரியர் சாந்த தேவராஜன் ( Dr Shanta Devarajan) சிஎன்பிசிக்கு தெரிவித்துள்ளார்.
நிதிப்பற்றாக்குறை மற்றும் நிதி கடனை நிலையாக்குவதற்காக இலங்கை முன்னெடுக்கும் கொள்கைகள் திட்டங்கள் தொடர்பில் IMF உடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிலையை இலங்கை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு மூன்றுவருடங்களிற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட வரிச்சலுகைகளே காரணம் என தெரிவித்துள்ள அவர், 2019 இல் அரசாங்கம் வரிச்சலுகைகளை அறிவித்ததன் காரணமாகவே நாங்கள் தற்போது இந்த குழப்பநிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பெறுமதி சேர் வரி 15 வீதத்திலிருந்து 8 வீதமாக குறைந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் தற்போது இலங்கை மிகவும் பலவீனமானதாக மாறும் தறுவாயில் உள்ளது என ஜோர்ஜ்டவுன் பல்கலைகழக பேராசிரியர் சாந்த தேவராஜன் ( Dr Shanta Devarajan) சிஎன்பிசிக்கு தெரிவித்துள்ளார்.
மிகவும் பலவீனமான நாட்டிற்கான அனைத்துகுணாதிசயங்களையும் இலங்கை கொண்டுள்ளதுடன், வீதிகளில் ஆர்ப்பாட்டங்கள் மாத்திரமல்ல எரிபொருளிற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றதாகவும் தெரிவித்துள்ள அவர் பொதுமக்களிற்கும் பொலிஸார் படையினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெறுகின்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கையில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் ,துப்பாக்கி பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளமை மிகவும் ஆபத்தான நிலைமை எனவும் ஜோர்ஜ்டவுன் பல்கலைகழக பேராசிரியர் சாந்த தேவராஜன் ( Dr Shanta Devarajan) தெரிவித்துள்ளார்.