மீண்டும் இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி
இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய மீண்டும் அனுமதி வழங்கப்படும் என விவசாய மற்றும் தோட்டக்கலை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்திய முட்டை இறக்குமதி
அங்குங்குகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் இன்று (2024.05.05) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மே மாதத்தில் முட்டை விலை கணிசமாக குறைய வேண்டும் என்றார்.
இந்த நிலையில், முன்னதாக இந்திய முட்டை இறக்குமதியை நிறுத்திய பின்னர், சில வியாபாரிகள் தன்னிச்சையாக முட்டையின் விலையை அதிகரித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.