மீண்டும் ஒரு சமையல் எரிவாயு அடுப்பு வெடித்தது
ஹங்வெல்ல, தித்தெனிய பிரதேசத்திலுள்ள வீடொன்றுக் குக் கொண்டு வந்த சமையல் எரிவாயு சிலிண்டரை பெண் ஒருவர் இன்று காலை எரிவாயு அடுப்புடன் இணைத்த சிறிது நேரத்திலேயே அடுப்பு வெடித்துச் சிதறியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த எரிவாயு சிலிண்டர் கடந்த 24ஆம் திகதி ஹங்வெல்ல பிரதேசத் திலுள்ள எரிவாயு விநியோகஸ்தர் ஒருவரிடமிருந்து கொள்வனவு செய் யப்பட்டுள்ளது. இந்த நிலையில் , நேற்றிரவு 28 ஆம் திகதி சிலிண்டரை அடுப்புடன் இணைத்து மூட்டி தண்ணீர் சூடாக்க வைத்த போது ஒரே தடவையில் அடுப்பு வெடித்ததக கூறப்படுகின்றது.
இதனையடுத்து உடனடியாக எரிவாயு சிலிண்டரை மூடி விட்டதாகக் குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர். எனினும் இதன்போது யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
அதேவேளை , எரி வாயு சிலிண்டரை அகற்றியபோது, வாயு வெளியேறும் பகுதியில் சவர்க்கார நுரைகளைத் தடவியபோது, காற்றின் மூலமாக நுரை வெளிவருவதாக எரிவாயு விநியோகஸ்தர் தெரிவித்ததால், எரிவாயு சிலிண்டரை வீட்டின் வெளியில் வைத்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இன்று காலையில் மட்டு. ஏறாவூரில் சமையலறையில் கேஸ் அடுப்பு ஒன்று வெடித்த சம்பவமும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
இலங்கையில் பல பாகங்களில் வெடித்து சிதறும் எரிவாயு; அச்சத்தில் மக்கள்!