18 ஆண்டுகளுக்கு பின் ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்
ராகு டிசம்பர் 02 ஆம் திகதி நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். இந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது ராகு தனது சொந்த நட்சத்திரமான சதயம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இந்த நட்சத்திரத்தில் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி வரை இருப்பார்.

முக்கியமாக ராகு தனது சொந்த நட்சத்திரத்துக்கு சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் செல்வதால், திடீர் பெரிய மாற்றங்கள், சாதனைகள், விரைவான முன்னேற்றம், எதிர்பாராத நிதி ஆதாயம் போன்றவை கிடைக்கும்.ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என நாம் இங்கு பார்ப்போம்.

மேஷம்
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் திடீரென்று புதிய வாய்ப்புக்களைப் பெறுவார்கள். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் மற்றும் பொருள் வசதிகள் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்களும் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

கன்னி
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்கள் போட்டிகளில் வெற்றி பெறுவார்கள். வாழ்க்கையில் நடந்து வரும் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீதிமன்ற வழக்குகளில் முடிவுகள் சாதகமாக வரும். ராகுவின் பார்வை 12 ஆவது வீட்டில் விழுவதால், ஆரோக்கிய பிரச்சனைகள் மற்றும் நிதி பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

விருச்சிகம்
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்கள் புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் அதிகரிக்கும். ராகுவின் அருளால் லட்சியங்களை அடைவீர்கள். ஆனால் அவசரமாக எதையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். செலவுகளை அதிகம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். பட்ஜெட்டுகளில் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு பிரச்சனையையும் பேசி தீர்க்க வேண்டும். தொழில் ரீதியாக எந்த வேலையை எடுத்தாலும், அதில் வெற்றி காண்பீர்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். இதனால் கையில் பணம் அதிகம் குவிந்து, நிதி நிலையில் உயர்வு ஏற்படும்.
