ஆப்கானின் நிலைவரங்கள் இலங்கையையும் பாதிக்கலாம்!
ஆப்கானிஸ்தானில் தலிபன்கள் ஆட்சி செய்ய்தும் நிலையில் , அதன் தற்போதைய நிலைவரங்கள் இலங்கையிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடும் இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் அஷ்ரப் ஹைதாரி (Ashraf Haidari) தெரிவித்துள்ளார்.
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸுடனான சந்திப்பின்போதே ஆப்கானிஸ்தான் தூதுவர் இதனைத் கூறினார்.
குறிப்பாக, ஆப்கானிஸ்தானின் நிலைவரங்கள் இந்து சமுத்திர பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பில் தாக்கங்களை ஏற்படுத்தலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் போதைப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதாக குறிப்பிட்ட அவர், அவை பிராந்திய ரீதியில் இயங்கும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குழுக்களால் ஏனைய நாடுகளுக்குக் கடத்தப்படுகின்றதாகவும் குறிப்பிட்டார்.
இப்பிராந்தியத்திலுள்ள ஏனைய அரசாங்கங்களை வலுவிழக்கச் செய்யும் வகையிலான தீவிரவாத செயற்பாடுகளுக்கு நிதியளிக்கும் நோக்கிலேயே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாகவும் அவர் கூறினார்.
இவற்றால் இலங்கை உள்ளிட்ட கடலால் சூழப்பட்ட நாடுகளுக்கு நெருக்கடிகள் ஏற்படக்கூடும் என்றும் ஆப்கானிஸ்தான் தூதுவர் அஷ்ரப் ஹைதாரி (Ashraf Haidari)iதன்போது மேலும் தெரிவித்தார்.