சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஒருவரை கைது செய்யுமாறு ஆலோசனை!

Police Arrested Nuwara Eliya
By Shankar Sep 14, 2021 04:43 PM GMT
Report

நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் விடுமுறை விடுதியின் பொறுப்பாளராக செயற்பட்ட பொலிஸ் பரிசோதகர் ஒருவரை தாக்கியமை தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஒருவரை கைது செய்து மன்றில் ஆஜர் செய்யுமாறு சட்ட மா அதிபர் அலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

இந்த ஆலோசனை கிடைக்கும் போது குறித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் தற்போது பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்று, மேல் மாகாணத்தில் கடமையாற்றுவதாக அந்த தகவல்கள் உறுதி செய்தன.

எவ்வாறயினும் சம்பவம் இடம்பெற்ற கடந்த 2019 பெப்ரவரி மாதம் அவர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக கடமையாற்றியுள்ளதாகவும் அந்த தகவல்கள் உறுதி செய்தன. சம்பவம் பதிவான கடந்த 2019 இல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக தற்போதைய பிரதிப் பொலிஸ் மா அதிபர், தனது குடும்பத்தாருடன் நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று அங்கு பொலிஸ் விடுமுறை விடுதியில் தங்கியுள்ளார்.

இதன்போது அங்கு இடம்பெற்ற சம்பவம் ஒன்றினை மையப்படுத்தி, அவ்விடுதிக்கு பொறுப்பாக செயற்பட்ட பொலிஸ் பரிசோத்கர் தயாநந்த அழகப்பெரும எனும் பொலிஸ் அதிகாரியை தாக்கியுள்ளார்.

இது தொடர்பில் அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த விசாரணைகளின் போது,

பன்றி இறைச்சிக் கறி கோரி சமைத்து தருமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கோரி ஒரு தொகை இறைச்சியை கையளித்துள்ளதாகவும், அதனை சமைத்துக் கொடுத்த பின்னர் இறைச்சி போதுமானதாக இல்லை எனவும் தான் வாங்கிக்கொடுத்த இறைச்சியை விடுமுறை விடுதியில் உள்ள கடை நிலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோசடியாக சுவைத்துள்ளதாகவும் அதனாலேயே கறி போதாமல் போயுள்ளதாகவும் கூறி அந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

விசாரணைகள் நிறைவில் பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவு கோவையை சட்ட மா அதிபரிடம் ஆலோசனைப் பெற அனுப்பி வைத்துள்ள நிலையிலேயே தற்போது அதற்கான ஆலோசனைகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அதிலேயே தாக்குதல் நடாத்திய உயர் பொலிஸ் அதிகாரியைக் கைது செய்து நுவரெலியா நீதிமன்றில் ஆஜர் செய்ய ஆலோசனை வழங்ப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் கூறின.

எவ்வாறாயினும் இந்த செய்தி எழுதப்படும் வரை தற்போது பிரதிப் பொலிஸ் மா அதிபராக உள்ள அந்த அதிகாரி கைது செய்யப்பட்டிருக்கவில்லை, என்பது குறிப்பிடத்தக்கது.   

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US