இந்தியாவில் வசிக்கும் கனேடியர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்து
இந்தியாவில் வசிக்கும் கனேடியர்கள் எச்சரிக்கையுன் இருக்குமாரு கடேடிய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
கனடா நாட்டில் கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் இந்தியா- கனடா நாடுகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தி உள்ளது.
ஹர்தீப் சிங் நிஜார் கொலையில் இந்தியாவின் ஏஜெண்டுகள் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சுமத்தினார். இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்தது.
இந்திய பெற்றோர் கவலை; கனேடியர்களுக்கு எச்சரிக்கை
இந்த சம்பவத்தையொட்டி கனடாவில் உள்ள இந்திய தூதரக மூத்த அதிகாரி ஒருவரை அந்நாடு வெளியேற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அரசும் டெல்லியில் உள்ள கனடா தூதரக அதிகாரியை வெளியேறுமாறு உத்தரவிட்டது. இரு நாடுகள் இடையே இந்த நடவடிக்கை மேலும் மோதலை அதிகரித்து வருகிறது.
கனடாவில் ஏராளமான இந்தியர்கள் வசித்து வரும் நிலையில் இந்துக்களை கனடாவை விட்டு வெளியேறும் படி காலிஸ்தான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்தனர். அத்துடன் கனடாவில் இந்தியாவை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இரு நாட்டுக்கும் இடையே பகை உருவாகி இருப்பதால் இந்தியாவில் உள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்லைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கனடா பயங்கரவாதிகளின் புகலிடம் ; இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக கூறப்படுவது உண்மையில்லை ! அமைச்சர் அலிசப்ரி
அதேசமயம் இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் கனடா நாட்டை சேர்ந்தவர்கள் வசித்து வரும் நிலையில் , இந்தியாவில் வசிக்கும் கனடா நாட்டினர் விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு கனடா அரசாங்கம் அறிவுறுத்தி இருக்கிறது.