காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளம்பர நடிகர் மரணம்
வெலிக்கடை காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
வெலிக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்ததாக கூறி அப்பகுதி மக்கள் 119 என்ற காவல்துறை அவசர பிரிவுக்கு அழைத்து குறித்த இளைஞனை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
காவல்துறையினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் திடீர் சுகவீனம் காரணமாக முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் உட்பட 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுகேகொட குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் மீகஹகிவுல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நடனக் கலைஞர் மற்றும் விளம்பர நடிகர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.